யாழ். குடாநாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமைக்கு காரணம் வெளியானது!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தமைக்கு, வடிகாலமைப்பில் ஏற்பட்டிருந்த அடைப்பே காரணம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வடக்கின் பல பகுதிகளிலும், கனமழை பெய்திருந்ததுடன், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, யாழ். குடாநாட்டின் புவியியல் மையத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் வருடங்களில் குடா நாடு நீரில் மூழ்கி விடும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் குடா நாட்டு மக்களிடத்தில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

“யாழ். குடாநாட்டில் வெள்ளம் ஏற்பட்டமைக்கு, வடிகாலமைப்புகளில் ஏற்பட்ட அடைப்பே காரணம். மழைநீர் அந்தப் பகுதியில் தடைப்பட்டமையே வெள்ள நிலைமைக்கு முக்கிய காரணம்.

எவ்வாறாயினும், அண்மைய மழையினால், கடல்நீரேரியின் நீர்மட்டமோ, அந்தப் பகுதியில் உள்ள குளங்களின் நீர்மட்டமோ அதிகரிக்கவில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார

You might also like