சவுதியிலிருந்து பாரிய காயங்களுடன் நாடு திரும்பிய பெண்!

சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அங்கிருந்து பாரிய காயங்களுடன் நாடு திரும்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளார்.

கலேவளை – பம்பரகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார்.

2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம், போலி ஆவணங்களை தயாரித்து, தனது விருப்பத்தின் பேரிலேயே சவுதிக்கு வேலை பெற்றுச் சென்றதாக அந்த பெண் கூறியுள்ளார்.

இந்நிலையில், முதல் மூன்று மாதங்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி பணி புரிந்த போதிலும், அதன் பின்னர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், உறவினர்களின் தலையீட்டுடன் குறித்த வீட்டில் இருந்து வெளியேறிய அந்த பெண்ணுக்கு சம்பளம் உள்ளிட்ட எந்தவொரு கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கறுப்பு நிற ஆடை ஒன்றுடன் மட்டும் விமான நிலையத்தில் தான் இறக்கிவிடப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்த இலங்கைப் பெண் ஒருவர் சில ஆடைகளை வழங்கியுள்ளார்.

இதனையடுத்தே, குறித்த பெண் நாடு திரும்பியுள்ளதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறியுள்ளார. மேலும், தனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு தீர்வு பெற்றுத்தர வேணடும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

You might also like