இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் 44 பேருடன் மாயம்

ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த இரா­ணுவ நீர்­மூழ்கிக் கப்பல் தெற்கு அத்­தி­லாந்திக் கடலில் சென்­ற­போது மாய­மா­னது. அதில் பயணம் செய்த ஊழி­யர்கள் உட்­பட 44 பேரைத் தேடும் பணி நடை­பெற்று வரு­கி­றது. கடந்த சில தினங்­க­ளுக்கு முன் பட­கோ­னியன் கடல் பகு­தியில் இருந்து புறப்­பட்டு சென்ற மேற்­படி இரா­ணுவ நீர்­மூழ்கிக் கப்­பலே இவ்­வாறு மாய­மா­னது.தெற்கு அத்­தி­லாந்திக் கடலில் சென்று கொண்­டி­ருந்த போது திடீ­ரென கப்பல் மாய­மான வேளை கட்­டுப்­பாட்டு அறை­யு­ட­னான ரேடார் தொடர்பு துண்­டிக்­கப்­பட்­டது. கடற்­படை அதி­கா­ரிகள், அமெ­ரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அதி­கா­ரி­களும் கப்­பலைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

You might also like