களுவாஞ்சிக்குடியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

களுவாஞ்சிக்குடி துறைநீலாவணையில் மின்னல் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துறைநீலாவணையில் நேற்று (19) இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததனையடுத்து இந்த மின்னல் தாக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.மின்னல் தாக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீட்டிலுள்ள மின்சாரம் தாக்கி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளனது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like