வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சுகாதார மேம்பாட்டு பரிசளிப்பு விழா – 2017

டெங்குக்கட்டுப்பாட்டு செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து வவுனியா நகர சபை , வவுனியா தெற்கு பிரதேச சபை என்பவற்றின் பங்களிப்புடன் பாடசாலை மட்டத்திலும் திணைக்களங்கள் மட்டத்திலும் கிராம மட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளை மேலும் வலுவுட்டுவதற்காக நடாத்தப்பட்ட டெங்கு தொடர்பான சித்திர மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான, டெங்கு அற்ற பாடசாலை, திணைக்களங்கள் என்பவற்றிக்கான பரிசளிப்பு நிகழ்வு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் அவர்களின் தலமையில் இன்று (20.11.2017) காலை 10.00மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டத்தில் இடம்பெற்றது.

இராஜேந்திரகுளம் ஒமேகா லைன் ஆடைத்தொழிற்சாலை , ஓகன் அரசார்பற்ற நிறுவனம் , வவுனியா நகரசபை , வவுனியா தெற்கு பிரதேச சபை என்பவற்றின் அனுசரணையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் எம்.மகேந்திரன் , வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் வி.சிறீஸ்கந்தராஜா , கௌரவ விருந்தினர்களாக  வவுனியா தொற்று நோயியலாளர் வைத்தியர் யூட் பீரிஸ் , வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன், வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் சுகந்தி கிசோர் , விருந்தினராக பொதுச்சுகாதார பரிசோதகர் க.மேஜெயா , மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க.தியாகலிங்கம் , கிராம சேவையாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like