வவுனியா சிதம்பரபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையினரின் அனுசரணையில் வன்னி மாவட்ட சமூதாய பொலிஸ் பிரிவின் உதவியுடன் சிதம்பரபுரம் காவல் அரணில் இன்று (20.11.2017) காலை 10.00 மணியளவில் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈஷி பூரண சுவிஷேச சபையின் பிரதான பிஷப் பி. என். இராஜசிங்கம் (இ.பி.எம்) மற்றும் அவருடன் வருகை தந்த பிரதான போதகர்கள், வன்னி மாவட்ட சமூதாய பொலிஸ் பிரிவு நிலையத்தின் அதிகாரிகள், சிதம்பரபுரம் காவல் அரணின் பொறுப்பதிகாரி என பலரும் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

கண்ணாடி வழங்கல், பல் மருத்துவம், ஏனைய வியாதிகளுக்கு மருந்து வழங்கல் போன்ற சேவைகள் இன்றைய இலவச மருத்துவ முகாமின் இடம்பெற்றது.

You might also like