பெண்ணொருவரை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த இளைஞன் கைது

பெண்ணொருவரை திராவகம் ஊற்றி கொலை செய்து விட்டு ஒன்றரை வருட காலமாக தலைமறைவாக இருந்த இளைஞன் ஒருவரை அவிசாவளை, சீதாவாக்க பிரிவு விசேட பொலிஸ் விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், கெட்டஹெத்த, நாபாவல பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் குருணாகல் பிரதேசத்தில் விலங்கு பண்ணை ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் கொஸ்கம, பஹல கொஸ்கம, நாஹகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த திருமணமான இரண்டு பிள்ளைகளின் தாயான 43 வயதான பெண்ணொருவருடன் மறைமுக தொடர்பை வைத்திருந்துள்ளார்.

கொஸ்கம நகரில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த இந்த பெண், இளைஞனை கைவிட்டு வேறு ஒரு நபருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், கோபமடைந்த இளைஞன் கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி அழகு நிலையத்திற்கு சென்று பெண்ணின் தலையில் திராவகத்தை கொட்டியுள்ள நிலையில், இதன் காரணமாக பெண் உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் கணவன் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கு பேரன், பேத்திகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதவாக்க பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You might also like