இந்த வீதியில் அரசியல்வாதிகள் பயணிப்பார்களா? கிளிநொச்சி மக்கள் கேள்வி

கிளிநொச்சி – அக்கராயன்குளம், கந்தபுரம் வீதியை புனரமைத்து தரக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள சுமார் 800 குடும்பங்கள் குறித்த வீதியை பயன்படுத்துவதுடன், 2000க்கும் மேற்பட்ட மக்கள் நாளாந்தம் இந்த வீதியை பயன்படுத்தி வருகின்றனர்.

கந்தபுரம், அக்கராயன் ஆகிய இரு கிராமங்களையும் இணைக்கும் சுமார் 4 கிலோமீட்டர் வீதியை புனரமைப்பு செய்து தருமாறு அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த வீதியில் பயணிக்க முடியாதுள்ளதாகவும், வாகனங்கள் செல்ல முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கும் மக்கள், இந்த வீதியில் அரசியல்வாதிகள் பயணிப்பார்களா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

You might also like