வவுனியா மடுக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு

வவுனியா மடுக்குளம் மாதார் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் வட்டுக்கோட்டை இந்து வாழிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளிக்கினங்க நேற்றையதினம் (20.11.2017) மாலை 4.30மணியளவில் செங்கள்படை கிராமத்தை சேர்ந்த வறிய குடும்பங்களை சேரந்த 8 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள், பாதணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலக உத்தியோகத்தர்கள், வட்டுக்கோட்டை இந்து வாழிபர் சங்கத்தின் உறுப்பினர்கள், கிராம மக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எமது கோரிக்கையை ஏற்று செங்கள்படை கிராம மாணவர்களுக்கு உதவிபுரிந்த வட்டுக்கோட்டை இந்து வாழிபர் சங்கத்திற்கு கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

 

 

You might also like