இரவுநேர களியாட்ட விடுதியில் சிக்கிய இலங்கை அமைச்சரின் மகள்கள்!

சமகால அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள அமைச்சரின் மனைவி மற்றும் இளம் மகள் இருவர் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாரிய ஊழல் மோசடி தொடர்பில் குற்ற விசாரணை பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைக்கமைய கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று பெண்களும் சர்ச்சைக்குரிய இளம் வர்த்தகர்களுடன் வெளிநாட்டு விஜயங்களில் ஈடுபட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

விசேடமாக மகள் இருவரும் இரவுநேர களியாட்ட விடுதிகளில் அதிக நேரத்தை செலவிடுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மூன்று பேரின் தனிப்பட்ட கணக்கின் ஊடாக பாரியளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை இரகசியமான முறையில் குறித்த வர்த்தகர்கள் ஊடாக இந்த கணக்குகளுக்கு சென்றுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று பெண்கள் தொடர்பில் பலமுறை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் உயர் இடத்தில் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் கைது செய்யப்படவுள்ளார்கள் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like