முகநூல் காதல்: யுவதி தற்கொலை, இளைஞன் விபத்தில் மரணம்

முகநூல் ஊடாக காதலித்து வந்த யுவதியும், இளைஞனும் உயிரிழந்த சம்பவங்கள் கேகாலை மற்றும் வரக்காபொலை ஆகிய பிரதேசங்களில் நடந்துள்ளன.

முகநூல் ஊடாக அறிமுகமான காதலன் மீது அதிருப்தியடைந்த யுவதி ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வரக்காபொலை, தொலங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த யுவதி முகநூல் மூலம் அறிமுகமான இளைஞனை இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களில் சம்பந்தப்பட்ட இளைஞன், யுவதியை நேரடியாக சந்தித்ததில்லை.

இதன் காரணமாக அதிருப்தியடைந்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் 6 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

அதேவேளை, முகநூல் மூலம் அறிமுகமான காதலியை சந்திக்க பூகொடை பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற 30 வயதான இளைஞனொருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இளைஞன் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வரக்காபொலை, மஹாஹேன பிரதேசத்தில் பேருந்துடன் மோதியதில் படுகாயமடைந்த இளைஞன், அண்மையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் கண்டி, நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரை சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

முகநூலில் அறிமுகமான பின்னர் யுவதியை கண்டிக்கு வருமாறு கூறிய இளைஞன், யுவதியை சந்திக்க மோட்டார் சைக்கிளில் கண்டிக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.


You might also like