மீண்டும் சுனாமி அச்சத்தில் முல்லைத்தீவு மக்கள்!

மீண்டும் சுனாமி அனர்த்தம் ஏற்படும் என்ற பயத்தில் முல்லைத்தீவு மக்கள் இருப்பதாகவும், இதனால் வீடுகளை விட்டு வெளியேற அச்சம் கொள்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நகரப்பகுதியில் பொது மக்களின் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவில் கரையோரப்பகுதியில் உள்ள பொது மக்கள் மத்தியில் சுனாமி அனர்த்தம் ஏற்படும் என அண்மையில் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்து அப்பகுதிகளில் இருந்து இடபெயர்ந்துள்ளதுடன், பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு பயந்து கொண்டு இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இடம்பெயர்ந்த ஒருபகுதி மக்கள் இதுவரை தமது இருப்பிடங்களுக்கு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கரையோரப் பகுதிகளில் பொது மக்கள் நடமாட்டத்தினை தவிர்த்து வருகின்றனர்.

இவ்வாறன சூழ்நிலையில் முல்லைத்தீவு நகரப்பகுதி வெறிச்சோடி காணப்பவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like