அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த விசேட தேவையுடைய மாணவன்

அகில இலங்கை ரீதியில் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவன் சாதனை படைத்துள்ளார்.

சம்மாந்துறை அல் அர்சத் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் எம்.ஜ.எம்.முஜீப் என்ற மாணவனே இரு பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டி ஹோமாகம மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில் உயரம் பாய்தலில் இரண்டாம் இடத்தையும், பரிதி வட்டம் வீசுதலில் மூன்றாம் இடத்தையும் எம்.ஜ.எம்.முஜீப் பிடித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் மாணவனைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

You might also like