சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு! உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சரால் பதவிநீக்கப்பட்டதை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் டெனீஸ்வரன் அந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

எனினும், அந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, டெனீஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுவைத் தொடர்ந்து விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like