மூன்று மாணவிகள் துஷ்பிரயோகம்? அதிபருக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அதிபர் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்தில் கல்வி பயிலும் குறித்த மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அதிபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, சந்தேநகபரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த அதிபரை சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் உதவியுடன் விசேட சட்டவைத்திய அதிகாரியிடமும், மனநோய்மருத்துவரிடமும் அனுமதித்து, அவர் தொடர்பான அறிக்கைகளைப் பெறுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.


 

You might also like