இலங்கையரின் வலையில் சிக்கிய அதிசய மீன்!

நீர்கொழும்பு கடற்பகுதியில் மிகவும் அரிய வகை மீனினம் வலையில் சிக்கியுள்ளது.

நீர்கொழும்பு – மங்குளிய லேல்லம பகுதி கடற்பகுதியில் ப்ளு பின் டூனா என்ற மீன் இனமே இவ்வாறு சிக்கியுள்ளது.

230 கிலோவுக்கும் அதிக நிறையுடனான இந்த டூனா மீனின் சந்தை பெறுமதி 2 கோடி ரூபாயை விடவும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் டூனா மீன் சாதாரணமாக கிடைக்கின்ற போதிலும் ப்ளு பின் டூனா எனப்படும் மீன் சிக்குவதென்பது அரிய விடயமாகும் என மீனவ வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இலங்கை கடல் எல்லையில் இந்த மீன் வகையினை காண முடியாதெனவும் நியூசிலாந்து போன்ற கடல் எல்லைகளிலேயே இந்த மீன்களை அவதானிக்க முடியும் எனவும் கூறப்படுகின்றது.

You might also like