இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள்

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக வெளிநாட்டுப் பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இவர்கள் பாலியல் தொழில் செய்யும் விடுதி ஒன்றை நடத்திச் சென்றுள்ளனர்.

குறித்த விடுதியை கொள்ளுப்பிட்டி பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது விடுதியை நடாத்திச் சென்ற நபர்களும், பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களுள் தாய்லாந்து பெண்கள் மூவரும், இலங்கைப் பெண்கள் நால்வரும் உள்ளடங்குவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like