சற்று முன் வவுனியா ஒமந்தையில் தனியார் பேரூந்து விபத்து : பலர் காயம்

வவுனியா ஓமந்தை இரானுவ பாதுகாப்பு சாவடிக்கு அருகே இன்று (22.11.2017) மாலை 5.00மணியளவில் தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மரத்தடிகளை ஏற்றி வந்த கப்ரக வாகனமோன்று ஓமந்தை இரானுவச்சாவடிக்கு அருகே வீதியில் தரித்து நின்ற சமயத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேரூந்து கப்ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது . 

இவ் விபத்தில் தனியார் பேரூந்தில் பயணித்த பயணிகள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like