ஆவா குழு உறுப்பினர்கள் இருவர் கைது?!

இராணுவ அதிரடிப் படையினரின் வீதிச் சோதனையின்போது ஆவா குழுவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்குக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. பருத்தித்துறை, நீர்வேலியில் இக்கைது இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முச்சக்கர வண்டியொன்றைப் பரிசோதனை செய்த அதிரடிப் படையினர், சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைப் பறிமுதல் செய்தனர்.சந்தேக நபர்களின் கைபேசிகளைப் பரிசோதனை செய்தபோது, அவற்றில் வாள்களுடன் இளைஞர்கள் நிற்கும் படங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஏற்கனவே ஆவா குழு தலைவராகக் கருதப்படும் நிஷா விக்டர் என்பவர், பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோட முயற்சித்த குற்றத்தின் பேரில் ஒன்றரை வருட கடூழியச் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like