வவுனியாவில் கைக்குழந்தையை தவிக்க விட்டு தலைமறைவான யாழ். பெண்!!

வவுனியாவில் கைக்குழந்தையை தவிக்க விட்டு தலைமறைவான யாழ். பெண்

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பத்து மாத கைக்குழந்தையை தவிக்க விட்டு பெற்ற தாய் தலைமறைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியில் வசித்து வந்த பெண்ணே கணவரையும், கைக்குழந்தையையும் தவிக்க விட்டு தலைமறைவாகியுள்ளார். இது குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட குறித்த பெண் கண்டி பிரதேசத்தை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் முடித்துள்ளார். குழந்தை பிறந்ததன் பின் மகளைத் தேடி வவுனியா வந்த குறித்த பெண்ணின் தாயார், தனது மனைவியை தன்னிடமிருந்து பிரித்து அழைத்து சென்று விட்டதாக கணவர் தெரிவித்தார்.

தனது மனைவி கடந்த 11ஆம் திகதி முதல் தன்னையும், குழந்தையையும் தவிக்க விட்டு சென்று விட்டதாகவும், தனது மனைவியை கண்டுபிடிக்க பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பால்மணம் மாறாத குழந்தை தாய்க்காக ஏங்கி அழுவதாகவும், இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊராக சென்று மனைவியை தேடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, குறித்த பெண்ணை யாராவது பார்த்தால் 076 – 3219514 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like