வவுனியாவில் 8மணித்தியாலத்தினுள் கேரளா கஞ்சாவினை கடத்திய மூவர் கைது

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் 8மணித்தியாலத்தினுள் 6.2கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இ.போ.ச பேரூந்தில் காத்தான்குடி, மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 29வயதுடைய முகமட் அலியார் முகமட் அஸ்வர் என்பவரின் பயணப்பொதியினை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (23.11.2017) மாலை 5.30 மணியளவில் சோதனையிட்ட சமயத்தில் 4கிலோ 25கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து அனுராதபுரம் நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் பயணித்த அலவத்தேகம , பலுகஸ்வவ பகுதியைச்சேர்ந்த 32வயதுடைய ரூவான் பாலித என்பவரின் பயணப்பொதியினை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (23.11.2017) இரவு 7.30மணியளவில் சோதனையிட்ட சமயத்தில் 1கிலோ 950கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி இ.போ.ச பேரூந்தில் பயணித்த மள்ளியபுரம் , புத்தளம் பகுதியை சேர்ந்த 32வயமுடைய முகமது இபிராயின் முகமது முரசி என்பவரின் பயணப்பொதியினை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (24.11.2017) அதிகாலை 1.00 மணியளவில் சோதனையிட்ட சமயத்தில்4கிலோ கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like