வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன பதவியேற்றார்

வவுனியா மாவட்டத்தின் 36 ஆவது அரசாங்க அதிபராக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த சோமரத்தின விதான பத்திரன இன்று (24.11.2017) காலை 8.30மணியளவில் மாவட்ட செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதையடுத்து , சுபநேரத்தில் மங்கள விளக்கேற்றி பதவியேற்றுக்கொண்டு முதல் கடிதங்களுக்கு கையேழுத்திட்டார்.

சிறப்பான வரவேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், முன்னாள் அரசாங்க அதிபர் எம்.வி.ரோஹண புஸ்பகுமார , திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மரநடுகை வேலைத்திட்டத்தில் புதிய அரசாங்க அதிபர், முன்னாள் அரசாங்க அதிபர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தாண்டிக்குளம் தொடக்கம் ஓமந்தை வரையான பகுதிகளில் மரநடுகை தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

 

You might also like