வவுனியா நெளுக்குளம் பொலிஸாரின் அதிரடி செயற்பாடு நால்வர் கைது

வவுனியா நெளுக்குளம் பகுதியில் பொது இடத்தில் மதுவருந்திய நால்வரை நேற்று (23.11.2017) மாலை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேரியகுளம் குளத்திற்கு செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மதுபானம் அருந்துவதாக வவுனியா நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி எ.ஸ் அத்தனாயக்க தலமையிலான குழுவினர் அந்த இடத்திற்கு சென்று வீதியில் மதுவருந்திய 21,22,25,41 வயதுடைய நால்வரை கைது செய்துள்ளனர்.

இன்றையதினம் (24.11.2017) நால்வரையும் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like