கிளிநொச்சியில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி பளை இந்து ஆரம்ப வித்தியாலாயத்தைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, யுத்தத்தில் பெற்றோரை இழந்த மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 141 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், புலம் பெயர் நண்பர்களின் நிதிப்பங்களிப்புடன் நடைபெற்ற நிகழ்வில் உப அதிபர்கள், ஆசிரியர்கள், என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

You might also like