வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட விளையாட்டு போட்டி

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இடையே விளையாட்டுப்போட்டி இன்று (24.11)  வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகர பிரதேச செயலகம் ,வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வெண்கலச்செட்டிகுளம் பிரதேசசெயலகங்கள் சார்ந்தோர் மற்றும் சீட் நிறுவனம் , வரோட் நிறுவனம் , ஓகான் நிறுவனம் இணையும் கரங்கள் ,உயிரிழை ஆகிய நிறுவனங்களின் சார்பில் விளையாட்டு வீரர்கள்  இதில் கலந்து கொண்டனர் .

வேகநடை,  100 மீற்றர் ஓட்டம் ,  தண்ணீர் நிரப்புதல் , பலூன் ஊதி உடைத்தல் , சக்கர நாற்காலி ஓட்டம் , சங்கீதக்கதிரை எனப்பல போட்டிகள் வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன.

சமூகசேவை உத்தியோகத்தர்களான திருமதி பி.விமலேந்திரன், என். பாலகுமாரன் , செல்வி வி.சோபனா அபிவிருத்தி உத்தியோகத்தர்களான செல்வி .தி.கலைவாணி, திருமதி ப.கோமளா, திருமதி.செ.கலா,திருமதி.எஸ் ஜீவசாந்தி , எஸ்,கே.வசந்தருபன், திருமதி ஜெ. செல்வமலர் ஆகியோரும் சீட் நிறுவனத்தின் சந்துரூ, மற்றும் டிலானி , ஓகான் நிறுவன கலைவாணி ,வரோட் நிறுவன விக்ரர் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர் .

நண்பகல் வரை நடைபெற்ற நிகழ்வில் மதியபோசனத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

You might also like