வவுனியாவில் குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

வவுனியா மாமடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இன்று (24.11.2017) மதியம் 2.30மணியளவில் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கோவிற்குளம் 5ம் ஒழுங்கையில் வசித்து வரும் ஜெயப்பிரதாப் (வயது -26) மற்றும் அவரது மனைவி  நேற்று முன்தினம் மகாறம்பைக்குளத்திலுள்ள அவரது சித்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இன்று (24.11.2017) மதியம் 12.30 மணியளவில் அவரது சித்தியின் மகள் (வயது – 16) , மகன் (வயது – 14) மற்றும் அவரும் அவரது மனைவியும் (வயது – 18) மாமடு குளத்திற்கு அருகே விளையாடச் சென்றுள்ளனர்.

அதன் போது குறித்த நால்வரும் குளத்தில் தவறுதளாக வீழ்ந்துள்ளனர். அவர்கள் கூக்குரல் இட்ட போது வீதியில் சென்ற இருவர் ஜெயப்பிரதாப் அவர்களின் மனைவியையும் சித்தியின் மகனையும் மீட்டேடுத்தனர்.

மற்றைய இருவரும் குளத்தின் ஆழத்திற்கு சென்றதினால் பாரிய முயற்சியின் பின் இருவரையும் மீட்டேடுத்து மாமடு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து வரும் சமயத்தில் குறித்த இருவரும் மரணமடைந்துள்ளனர்.

இதன் போது திருமணமாகி இரண்டு மாதங்களான 26வயதுடைய ஜெயப்பிரதாப் மற்றும் சிறிராமபுரம் வித்தியாலய மாணவியான 16வயதுடைய பானுரேகா என்பவருமே உயிரிழந்தவர்களாவர்கள்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து மாமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You might also like