வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலை பரிசளிப்பு விழாவும் தாரகை சஞ்சிகை வெளியீடும்

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப்ப பாடசாலையின் பரிசளிப்பு விழாவும் தாரகை சஞ்சிகை வெளியீடும் இன்று (24.11.2017) காலை 9.30மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா அவர்களின் தலமையில் இடம்பெற்றது.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வரவேற்பு நடனம் , நாடகம் , நூல் வெளியீடு , நூல் ஆய்வுரை , பரிசளிப்பு வைபவம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதகிருஸ்ணன் , வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன் , ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.தேவசேனா , விருந்தினர்களாக சமயத்தலைவர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like