கசிப்­பைக் கட்­டுப்­ப­டுத்­து­மாறு வன்னேரிக்குளத்தில் போராட்­டம்

கசிப்பு உற்­பத்­தியை முற்­றாக ஒழிக்­கு­மாறு வன்­னே­ரிக்­கு­ளம் கிராம மக்­கள் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்தை நேற்று முன்­னெ­டுத்­தனர்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் கரைச்சிப் பிர­தேச செய­லர் பிரி­வுக்கு உட்­பட்ட வன்­னே­ரிக்­குள கிரா­மத்­தில் தொடர்ச்­சி­யாக கசிப்பு பாவ­னை­யும் உற்­பத்­தி­யும் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வ­தா­க­வும் அதனை உட­ன­டி­யாக கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர­வேண்­டும் என்று கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு, அக்­க­ரா­யன் பொலிஸ் நிலை­யம் முன்­பாக இந்­தக் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் நடத்­தப்­பட்­டது.

கடந்த வாரம் இந்­தப் பகு­தி­யில் கசிப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­ட­வர்­களை கிராம அலு­வ­லர், இளை­ஞர்­கள் ஒன்று சேர்ந்து பிடித்­தி­ருந்­த­ னர். அந்த இளை­ஞர்­க­ளுக்கு எதி­ராக பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டது. சம்­பந்­தப்­பட்ட இளை­ஞர்­க­ளைப் பொலி­ஸார் விசா­ர­ணைக்கு நேற்று அழைத்­தி­ருந்­த­னர்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே கிராம மக்­க­ளால் மேற்­படி போராட்­டம் நடத்­தப்­பட்­டது. அக்­கரா­யன் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி போராட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­க­ளு­டன் பேச்சு நடத்­தி­னார். மக்­கள் மேற்­படி விட­யத்துக்­காக கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் நடத்­தி­யதை வர­வேற்­றார்.

கசிப்பு உற்­பத்­தியைக் கட்­டுப்­ப­டுத்த முழு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் அவர் உறு­தி­ய­ளித்­தார். இத­னை­ய­டுத்து போராட்­டம் முடி­வுக்கு வந்­தது.

You might also like