இளம் மாணவியின் உயிரை காவு வாங்கிய காதல்

இரத்தினபுரியில் உயர்தர மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.பதினெட்டு வயதான இந்த மாணவி, இரத்தினபுரி – மெதகம பகுதியைச் சேர்ந்தவர். இவர், இரத்தினபுரியின் பிரபல பாடசாலையில் கல்வி கற்று வந்தவர்.இவரது தாய் நேற்று முன்தினம் (22) வெளியே சென்றிருந்த சமயம், சேலை ஒன்றை எடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.இரவு வீடு திரும்பிய மாணவியின் தாய், வீட்டின் கதவுகளும் ஜன்னல்களும் மூடியிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்தார். கதவைப் பலமுறை தட்டியும் திறக்காததால், வீட்டின் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்தார்.அங்கே தனது மகளை தூக்கில் தொங்கிய நிலையில் கண்ட அவர் கூச்சலிட்டார். பின்னர், அயலவர்களது துணையுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.காதல் விவகாரம் ஒன்றே மாணவியின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

You might also like