சிறுமி மீது டிப்பர் மோதி விபத்து: காஞ்சிறங்குடாவில் அமைதியின்மை

மட்டக்களப்பு – காஞ்சிறங்குடா, கன்னங்குடா பகுதியில் 14 வயது சிறுமி மீது டிப்பர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்து காரணமாக காஞ்சிறங்குடா பகுதியில் சுமார் ஒரு மணித்தியாலம் அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.விபத்திற்குள்ளான சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிறங்குடா பகுதியில் சைக்கிளில் பயணித்த சிறுமி மீது கிரவல் ஏற்றிச்சென்ற டிப்பர் மோதி இன்று பிற்பகல் 1.30 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.இதனை அடுத்து, பிரதேச மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட டிப்பர் வண்டியின் சாரதி தாக்கப்பட்டுள்ளார்.சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.கிரவல் ஏற்றிச்சென்ற டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நாளை (25) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.கொக்கட்டிச்சோலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like