பாடசாலையில் ஆசிரியர் திட்டியதால் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்

அரக்கோணம் அருகே 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அருகே பணப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு விவசாயின் கிணற்றில் 4 பேர் உடல் மிதந்து வந்ததை பார்த்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்..

இதனையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஒரு உடலை மீட்டுள்ளனர். தொடர்ந்து உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

அங்குள்ள அரசுப்பள்ளியில் படித்த ரேவதி, சங்கரி, தீபா, மணீஷா ஆகியோர் ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

You might also like