கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சர்வமதப் பேரவை சந்திப்பு!

கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் தொடர் கவனயீர்ப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவ்ர்களின் உறவுகளை இலங்கை சர்வமதப் பேரவையின் குழுவினர் இன்று காலை சந்தித்துள்ளனர்.

மேற்படி பேரவையினர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களினது பிரச்சனைகள் சம்பந்தமாக கேட்டுத் தெரிந்து கொண்டதுடன் இப்  போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தமது பூரண ஆதரவு எப்பொழுதும் இருக்கும் எனத் தெரிவித்தனர்.

இச் சந்திப்பில் இலங்கை சர்வமதப் பேரவையின் இணைப்பாளர்கள், அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like