எங்களுடைய பிள்ளைகளை எங்களோடு வாழ விடுங்கள்

தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கும் அரசியல்வாதிகள் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கவில்லை.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் இன்று இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.இதேவேளை, நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பு உறுப்பினர்கள் இன்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தனர்.தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த மக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.நாட்டில் இனங்களிற்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு சிங்கள மக்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்த கொள்வதற்காக குறித் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக குறித்த அமைப்பினர் தெரிவித்தனர்.

You might also like