தாயை கொலை செய்து 2 மகள்மாரை காயப்படுத்திய சந்தேகநபர் தலைமறைவு

தெரணியகல மாலிபொட பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்து அவரின் இரண்டு பிள்ளைகளையும் ஒருவர் காயப்படுத்தியுள்ளார்.இந்த சம்பவம் நேற்றிரவு 7.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் 04 மற்றும் 07 எவயது மகள்மாரையும் சந்தேகநபர் காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.ஆரம்பகட்ட நீதவான் விசாரணைகளுக்காக சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பிள்ளைகள் தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்த பெண்ணின் சகோதரியுடன் தகாத உறவு வைத்திருந்த ஒருவரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.எனினும் சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like