பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக 50 விமான சேவைகள் இரத்து

இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக அபாய வலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.கடந்த 22 ஆம் திகதி குறித்த எரிமலையிலிருந்து புகை வௌியேற ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள 150,000 பேர் வௌியேற்றப்பட்டனர்.தற்போது எரிமலை எந்த நேரமும் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அபாய வலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு இடர்முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அபாயம் காரணமாக 50 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like