மாவீரர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட இளைஞர்களினால் இரத்ததானம் வழங்கி வைப்பு

நவம்பர் மாதம் என்றதும் நினைவுக்கு வருவது மாவீரர் தினம். தமிழர்களின் இதயங்களில் மறக்க முடியாத தியாகிகளான மாவீரர்களை இன்று உலகெங்கிலும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் உணர்ச்சிபூர்வமாக அஞ்சலிக்கின்றனர்.

இம்முறை வன்னியிலுள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அமைப்புகள், பொது மக்கள் எனப் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடக்கில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா மாவட்ட இளைஞர்களினால் இன்று (27.11.2017) மதியம் 1.00மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது இளைஞர்கள் தாமாகமே முன்வந்து இரத்ததானம் வழங்கியமை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

படையினரால் அபகரிக்கப்பட்டு இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டு வைத்திருக்கின்ற சில மாவீரர் இல்லங்களில் மாவீரர் தினத்தை கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like