வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் நினைவேந்தல் நிகழ்வு

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட​ பிரஜைகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களை நினைவில் சுமந்து அகவணக்கத்தினைச் செலுத்துமுகமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் கூடி மாவீரர்களை அஞ்சலித்தனர்.

மாவீரர்களுக்கான ஈகச்சுடரினை ஆறு மாவீரர்களின் உறவினர்கள் ஒரே நேரத்தில் ஈகைச்சுடரினை ஏற்றினர்.

இதேவேளை மாவீரர் உறுதிமொழிப் பாடலும் குறித்த நேரத்தில் ஒலிக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.‌

You might also like