3 வயது சிறுவன் குழியில் வீழ்ந்து மரணம்

அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட அஷ்ரப் நகர் கிரா­மத்தில் நேற்று காலை விளை­யாடிக் கொண்­டி­ருந்த சிறுவன் ஒருவன் மல­சலகூடத்­திற்­காக வெட்­டப்­பட்­டி­ருந்த குழியில் வீழ்ந்து மர­ணம­டைந்த நிலையில் மீட்­கப்­பட்­ட­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர்.

அம்­பாறை மாவட்­டத்தில் கடந்த இரண்டு தினங்­க­ளாக பெய்து வந்த அடை மழை கார­ண­மாக வீட்டின் ஓர­மாக வெட்­டப்­பட்­டி­ருந்த குழியில் நீர் நிரம்­பி­யி­ருந்த வேளையில் அப்­பக்­க­மாக விளை­யாடிக் கொண்­டி­ருந்த மூன்று வய­து­டைய சவு­றுதீன் ஹிமாஸ் அஹ்தி என்ற சிறுவன் தவறி வீழ்ந்து மர­ண­ம­டைந்­துள்ளார். இச்­சம்­பவம் நேற்றுக் காலை 11 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளது.

வீட்டு முற்­றத்தில் விளை­யாடிக்கொண்­டி­ருந்த சிறு­வனைக் காண­வில்லை என தாய் தேடி­ய­போது அச்­சி­றுவன் வைத்­தி­ருந்த தடி­யொன்று நீரில் மிதப்­பதைக் கண்டு அக்­கு­ழி­யினுள் தேடி­ய­போது சிறுவன் உயி­ரி­ழந்து சட­ல­மாக காணப்­பட்­ட­தாக மர­ண­ம­டைந்த சிறு­வனின் குடும்­பத்­த­வர்கள் தெரி­வித்­தனர்.

மல­ச­ல­கூடம் அமைப்­ப­தற்­காக வெட்­டப்­பட்­டி­ருந்த குழியில் நிர்­மா­ணப்­பணி இடம்­பெ­ற­வி­ருந்த போதிலும் அடை மழை கார­ண­மா­கவே மல­ச­ல­கூட நிர்­மா­ணப்­பணி பிற்­போ­டப்­பட்­ட­தாக உற­வி­னர்கள் தெரி­வித்­தனர்.

அக்­க­ரைப்­பற்று பொலி­ஸாரின் விசா­ர­ணைகள் மற்றும் பிரேதப் பரிசோதனை இடம்பெற்றதனைத் தொடர்ந்து ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

You might also like