காதலியை விடுதி அறைக்கு அழைத்த காதலன் : மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்த காதலி

அரநாயக்க பிரதேசத்தில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்த நிலையில் யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காதலனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது தனது காதலனின் திட்டத்தை கேட்டு பயந்த குறித்த யுவதி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
தனிமையான இடத்திற்கு சென்று கதைத்துக் கொண்டிருப்போம் என்ற காதலனின் ஆலோசனைக்கமைய விருப்பம் தெரிவித்து நேற்று முன் தினம் மதியம் வேளையில் தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் கேகாலை பிரதேசத்தை நோக்கிச் சென்றுள்ளனர்.கேகாலையை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் காதலன் “ நான் முதல் கூறியதைப் போன்று தனிமையான இடத்திற்கு சென்று பேசிக்கொண்டிருப்பதை விட விடுதி அறைக்கு சென்று உல்லாசமாக இருக்கலாம்” என கூறியதைக் கேட்டு பீதியடைந்த காதலி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்துள்ளார்.இவ்வாறு கீழே குதித்து படுகாயமடைந்தவர் அரநாயக்க பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வரும் 21 வயதுடைய யுவதியாவார்.குறித்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் காதலன் தனது காதலி விரும்பியே தன்னோடு வந்ததாகவும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே குறித்த விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பாக கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதே வேளை குறித்த இளைஞனை கைது செய்து பொலிஸ் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

You might also like