சீரற்ற காலநிலை – ஆபத்தென உணர்ந்தால் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படும். மீனவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கரையோரங்களில் அடை மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண் சரிவு மற்றும் கற்கள் புரண்டு விழுவதோடு, நிலம் தாழ் இறங்கும் ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மண் சரிவு ஆபத்துக்கள் ஏற்படும் என எண்ணினால் உடனடியாக அங்கிருந்து வெளியேருமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பொது மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் லக்கல, பள்ளேகல பிரதேச செயலக பிரிவும் சுற்றுப்புறங்களிலும், அல்கடுவ பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களிலும் மற்றும் கண்டி மத- தும்பர பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களை அண்மித்த இடங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like