சீனாவில் பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த சர்க்கஸ் புலி

சீனாவில் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சியின் போது கூண்டில் இருந்து தப்பி, பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புலி ஒன்று புகுந்ததில் இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் ஷான்க்‌ஷி மாகாணத்தில் உள்ள லின்பென் என்ற இடத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான பார்வையாளர்கள் அங்கு கூடி இருந்தனர்.

பெரிய அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிக்காக புலி உள்ளிட்ட விலங்குகள் கொண்டு வரப்பட்டிருந்தன. நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன், கூண்டு ஒன்றில் அடைக்கப்பட்டு இருந்த புலி திடீரென கூண்டை விட்டு வெளியேறி பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.

இதனால், பார்வையாளர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது. பார்வையாளர்கள் அலறியடித்தபடி புலிக்கு வழிவிட்டு ஒதுங்கினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு குழந்தைகள் காயமுற்றனர்.

புலி பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த காட்சிகள் சீனாவின் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

You might also like