கல்கமுவயில் கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்கள் அரிய வகை யானையுடையது என உறுதிப்படுத்தப்பட்டது

குருநாகல் கல்கமுவ பகுதியில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் அரிய வகை யானையுடையது என உறுதிக்படுத்தப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவித்தார்.

இருப்பினும் யானையை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே யானையின் உடலை கண்டுபிடிப்பதற்காக இன்று பொலிஸ் குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 22 ஆம் திகதி யானைத் தந்தங்கள் இரண்டுடன் பொல்பிதிகம பகுதியில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அந்த தந்தங்கள் அரிய வகையானது என்பதை அறிந்த பின்னர் வடமேல் மாகாண வனஜீவராசிகள் வலயத்திற்கு உட்பட்ட வனஜீவராசிகள் பணிப்பாளரின்
பணிப்புரைக்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் சிலர் யானையை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

பொல்பிதிகம மற்றும் ஹேரத்கம பகுதிகளின் கிராம சேவகர் உத்தியோகத்தர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like