கடல் கொந்தளிப்பில் டொல்பின்கள் நடனம்! இலங்கையில் அபூர்வ சம்பவம்

இலங்கையில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக டொல்பின் மற்றும் திமிங்கிலங்களை கரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நுரைச்சோலை – இலந்தடி கடற்கரைக்கு அருகில் சமகாலத்தில் டொல்பின்களின் கூட்டம் ஒன்றை அவதானிக்க காணக்கூடியதாக உள்ளது.

இந்த நாட்களில் கடலில் நீண்ட தூரம் செல்லாமல் டொல்பின், திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளன.

எதிர்வரும் மார்ச், ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் டொல்பின்களின் வருகையை பார்வையிட முடியும் எனவும், இந்த நாட்களில் அதிகளவில் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பல்வேறு அளவிலான டொல்பின்கள் வருகைத்தருவதாகவும், டொல்பின் நடனங்களை பார்வையிட வேண்டும் என்றால், இலந்தடி பிரதேசத்திற்கு வருகைத்தருமாறு கூறப்படுகின்றது.

பகல் நேரங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதனால், காலை நேரங்களில் டொல்பின் மீன்களை பார்வையிடுவதென்பது இலகுவான நடவடிக்கையாகும்.

இவ்வாறான சம்பவங்களில் இலங்கையில் நடப்பது அபூர்வமான விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like