இலங்கையில் சீரற்ற காலநிலையில் தீவிரமடைந்துள்ள நிலையில் மன்னாரில் இன்று கடல் கொந்தளிப்புடன்

இலங்கையில் சீரற்ற காலநிலையில் தீவிரமடைந்துள்ள நிலையில் மன்னாரில் இன்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

மன்னார் – வவுனியா பிரதான வீதியில் மன்னார் மேம்பாலத்தை அண்மித்த பகுதிகளில் வீதிக்கு மேலாகக் கடல் அலைகள் எழுந்தன.

இலங்கையை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடை மழை பெய்து வருகிறது.

மன்னாரை அண்டிய கடற்பகுதியில் தாழமுக்கம் நிலை கொண்டுள்ளமையினால், ஏற்பட்ட சுழற்சியின் காரணமாக கடல்நீர் நிலப்பகுதியை நோக்கி நகர்கின்றன.

இதன்காரணமாக கடலில் காணப்படும் கடற்தாவரங்கள் பல அள்ளுண்டு கடலில் நீரில் வருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like