யாழில் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடும் பொலிஸார்!!!

யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் கலந்த இனிப்புகளை விற்பனை செய்த இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, யாழ். குடாநாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பை ஒன்றில் மறைத்து வைத்து விற்பனை செய்த இருவரை நேற்று மாலை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரபல பாடசாலைகளுக்கு அருகாமையில் போதை கலந்த இனிப்புகளை விற்பனை செய்வது இவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்த சந்தர்ப்பத்தில் அவர்களிடம் சுமார் 50 இனிப்புகள் மீட்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து பெற்றோரும் மாணவர்களும் அவதானமாக செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பாடசாலைகளை இலக்கு வைக்கும் நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You might also like