“நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மேல், மத்திய ஊவா மற்றும் தென் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசம் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற் காலநிலை காரணமாக பொது மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், காலி, களுத்துறை, நுவரெலியா, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில்  தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. அத்துடன், கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.

மேலும்,  கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக அசாதாரண கால நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே, தற்போது மேல், மத்திய ஊவா மற்றும் தென் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் திடீர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

You might also like