கொழும்பு நகரமே இருளில் மூழ்கியது

கொழும்பின் பல பகுதிகளில் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வறட்சியான காலநிலை தற்போது நிறைவடைந்து கடும் மழை பெய்து வருகின்றது.

இந்த சீரற்ற காலநிலையினால் கொழும்பின் பல இடங்களில் மின் விநியோகத்தில் திடீரென பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொழும்பு நகரமே இருளில் மூழ்கியுள்ளது.

இதேவேளை, அவசர நிலைமைகளின் போது தாம் வாழும் பகுதியில் உள்ள பிரதேச செயலகம் அல்லது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கம் 117க்கு தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like