அம்பாறையில் பேரிரைச்சலுடன் கடல் கடும் கொந்தளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறையில் பேரிரைச்சலுடன் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்கரையோரப் பகுதியில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு அதிகரித்துள்ளதுடன், மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த பகுதியில் கடும் காற்று வீசுவதாகவும், இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like