சடலமாக மீட்கப்பட்ட அண்ணன், தங்கை! உயிரிழப்புக்கான காரணம் வெளியானது

காணாமல் போயிருந்த நிலையில், மஸ்கெலியா – கவரவில பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட அண்ணன், தங்கை ஆகிய இருவரினதும் பிரதே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனை நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் இன்று நடைபெற்றது. இதன்படி, குறித்த இருவரும் நீரில் மூழ்கியமையால் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனைகளை தொடர்ந்து சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 28), பரமேஷ்வரன் மகாலெட்சுமி (வயது 19) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு – கணேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த அண்ணன், தங்கை இருவரும் பாக்றோ தோட்டத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், கடந்த 26ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தனர்.

இது குறித்து உறவினர்களினால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், குறித்த இருவரையும் நேற்று மதியம் கவரவில பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சடலமாக மீட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த இருவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like