அரச ஊழியர்களின் இடமாற்றங்களுக்கு தடை!

அரசாங்க ஊழியர்களின்க்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் அரசாங்க ஊழியர்களின் வருடாந்த இடமாற்ற நடவடிக்கைகள் அந்தத் திணைக்களங்கள் மூலமாக மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும்.

அந்த வகையில் 2018ம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் இடமாற்றங்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜனவரியில் அது நடைமுறைக்கு வர இருந்தது. இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அமைச்சு

இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இடமாற்றங்களோ பதவி உயர்வுகளோ வழங்குவது தடை என்பதால், அரச ஊழியர்களின் இடமாற்றங்களுக்கு தேர்தல் ஆணையம் தற்காலிக தடைவிதித்துள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You might also like